ஜப்பானின் கடலோரத்தில் 170 கிலோமீட்டர் தொலைவில் அந்நாட்டிற்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ஜப்பானின் ஆராய்ச்சி கப்பல் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஜப்பானின் ஆய்வு கப்பலை உளவு பார்ப்பது போல் நெருங்கி பறந்து சென்று உள்ளது என ஜப்பானின் மீன்வளக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று கூறியதாவது “சீனாவின் கடப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் மீன்வள ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகத்தின் யோகா மாறு பகுதிக்கு பின்னால் இருந்து வந்தது.

மேலும் அது கப்பலை 150 முதல் 200 மீட்டர் வரை நெருங்கி சென்றது. இதனை அடுத்து கடல் பரப்பிலிருந்து 30 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து வந்த ஹெலிகாப்டர் அதன் பின் வேறு இடத்திற்கு சென்று விட்டது” என கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஜப்பான் அரசு கூறியதாவது “சீனாவின் இந்த செயல் மிகவும் வருத்தத்திற்குரியது. மேலும் இது போன்ற செயல்களை அந்நாடு மீண்டும் செய்ய கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.