நமது அண்டை நாடான மாலத்தீவில் எழில் மிகு கடற்கரைகள், படர்ந்து விரிந்த வெள்ளை நிற மணல் பரப்பு, அழகிய ரெசார்டுகள் விமானங்கள் மூலம் உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் மாலத்தீவில் சில நாட்கள் செலவிடவே குறைந்தது லட்சம் ரூபாய் தேவைப்படும். மாலத்தீவுக்கு நிகரான அழகு நமது அரபிக் கடலில் அமைந்துள்ள மினிகாய் தீவில் பட்ஜெட்டில் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம்.

மினிகாய் தீவு கடற்கரை பிரியர்களுக்கும் நீர் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் சிறந்த இடம். கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் அமைந்துள்ள லட்சத்தீவு கூட்டத்தில் இரண்டாவது பெரிய தீவு மினிக்காய். இந்த தீவை சுற்றி பார்க்க குளிர்காலமும் கோடைக்கும் முந்தைய காலமும் ஏற்றது. கோடை காலம் இங்கே மிகுந்த வெப்பமயமாக இருக்கும். தற்போது சிறந்த சீதோசன நிலை நிலவும்.

சுமார் 180 அடி உயரம் கொண்ட லைட் ஹவுஸ் அட்ராக்சன் ஆக உள்ளது. விமான ஓடுதளம் உள்ள ஒரே தீவு இந்த தீவு. மாலத்தீவை போல் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக நன்கு அறியப்பட்ட இடம் இது. லட்சத்தீவில் பார்க்கவேண்டிய சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று. இயற்கையின் மாயாஜாலத்தை தெரிந்து கொள்ள இது ஒரு சிறந்த வழி.

நீர் வழி அல்லது வான் வழியாக மட்டுமே இங்கு வர முடியும். மினிகாய் தீவுக்கு செல்வதற்கு அகத்தி விமான நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும். நீர் வழி என்றால் பிரச்சனை இல்லை. கொச்சியிலிருந்து பயணிகள் கப்பல்கள் பல இயக்கப்படுகின்றன. அதில் முன்பதிவு செய்துவிட்டு செல்லலாம்.