தென்பெண்ணை ஆற்று தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளது.  ஏற்கனவே மூன்று முறை தீர்ப்பாயம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காத நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பாக தீர்ப்பாயம் அமைக்கவில்லை என சொல்லப்பட்டது. உடனே கோபமடைந்த நீதிபதி ஹிருஷிகேஷ் ராய்,

கடந்த முறை நாங்கள் உங்களுக்கு இதுதான் கடைசி கால அவகாசம் என்பதை திட்டவட்டமாக கூறியிருந்தோம். அப்படி இருந்தும் ஏன் தீர்ப்பாயத்தை அமைக்காமல் இருக்கிறீர்கள் ? மிக முக்கியமான நதிநீர் பங்கீடு விவகாராம் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா ? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

உடனே மத்திய அரசு கர்நாடகாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் நிலைப்பாட்டை கேட்டுவிட்டு நாங்கள் முடிவு சொல்கிறோம் என்று சொன்னது அதிருப்தி அடைந்த நீதிபதி, பழைய அரசு, புதிய அரசு என்பதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை. தீர்ப்பாயம் அமைக்க வேண்டியது உங்கள் வேலை ஏன் ? இன்னும் அமைக்காமல் இருக்கிறீர்கள் என்பதற்கான பதிலை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு,

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கர்நாடகா அரசு  நிலைப்பாட்டை தெரிந்துவிடும். அப்போது எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம் அதுவரை கால அவகாசம் வேண்டும் என்று சொன்னதுக்கு,  உங்களுக்கு ஒரு வாரம் தான் டைம். அதற்குள் உங்களது நிலைப்பாட்டை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுங்கள் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்கள்.