
டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தின் பகினி நிவேதிதா கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போது திரையில் சுவாமி விவேகானந்தரின் படம் காட்டப்பட்டது. இதனால் மாணவியின் நடனம் நிறுத்தப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், கல்லூரி முதல்வர் நேரடியாக மேடைக்கு சென்றார்.
அங்கு திரையில் காணப்பட்ட சுவாமி விவேகானந்தரின் படத்தை மட்டுமே அகற்றுவதற்கான வழிமுறைகளை செய்தார். இதனால் மாணவியின் நடன நிகழ்ச்சி எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்து நடந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் பலரும் கல்லூரி முதல்வரின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அதோடு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.facebook.com/share/r/tfiEyzxL5tDgG9rV/