அசாதாரண கட்டிடக்கலை மற்றும் புதிய அனுபவங்களை விரும்புபவர்களுக்கு ஜப்பானில் உள்ள ஒரு வித்தியாசமான கழிப்பறை தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த கழிப்பறை முழுமையாக ஒரு நீர்வாழ் காட்சிசாலை போல, பயனாளிக்கு கண்ணுக்கினிய அனுபவத்தை அளிக்கிறது.

 

ஜப்பானின் பிரபல ஹிப்போபோ பாப்பா கஃபேயில் அமைந்துள்ள இந்த குளியலறை, பார்வையாளர்களிடையே வியப்பையும் ரசனையையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கழிப்பறையின் சுவர்களும் தரையும் கண்ணாடியால் ஆனது. அதன் சுற்றியுள்ள சுவறுகளில் நீர் நிரப்பப்பட்டு, பல்வேறு வகையான மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் காட்சியளிக்கின்றன.

ஒருவர் கழிப்பறைக்குள் நுழையும் போதே, சுற்றிலும் மீன்கள் மிதக்கும் காட்சி உருவாகி, ஒரு அமைதியான நீர்குழியில் இருப்பது போன்ற உணர்வு தோன்றும். இது போன்ற மீன்வளக் கழிப்பறை உலகில் மிகவும் அபூர்வமானது. இது தொடர்பான வீடியோ கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த பலர், இதைச் சார்ந்த உணர்வுகளையும், நகைச்சுவையான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தனித்துவமான அனுபவம், பார்வையாளர்களிடையே மிகுந்த பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தக் கழிப்பறை, ஜப்பானுக்கு பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .