மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை மீட்போம் என்று பச்சை பொய்யை பேசினார். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்த காலம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கால  காலகட்டத்தில் தான் நடந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது.  1974 – 76 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய நாடு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. அப்போது தமிழகத்தில் திரு. கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி தட்டி கேட்கல. போராட்டம் நடத்தல. இன்றைக்கு முதலமைச்சர் வீர வசனம் பேசுகிறார். கட்சி தீவு பறிபோன காரணத்தினால தமிழ்நாட்டின் மீனவர்கள்….  குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

மீனவர்கள் மீன் பிடிக்கின்ற போது அவர்களுடைய வலையை உலர வைப்பதற்கும்,  ஓய்வு எடுப்பதற்கும் கச்சத்தீவை பயன்படுத்தி வந்தார்கள். அந்த உரிமை திமுக அரசாங்கத்தினால் பறிபோனது. மாண்புமிகு அம்மா அவர்கள் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள்.  பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். கச்சத்தீவை மீட்டு தர வேண்டும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள், பலனில்லை.

2008ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே அந்த காலகட்டத்திலே இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…. கழகத்தினுடைய பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள்.  உச்ச நீதிமன்றத்திலே… என்னுடைய தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள.  அவர்கலாய் அந்த பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கு,  தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்று நம்முடைய புரட்சித்தலைவி அம்மா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அன்றைய அரசாங்கம் திமுக அரசாங்கம். அதனை கண்டு கொள்ளவில்லை. அதோடு உச்சநீதிமன்றம் உடனடியாக மாநில அரசுக்கும் – மத்திய அரசுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியது. அந்த காலகட்டத்தில் கூட இங்கே ஆட்சி செய்த முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் உடனடியாக பதில் மனு போடல.

மத்திய அரசாங்கம் என்ன பதில் மனு போடுகிறது என்று பார்த்து,  தமிழ்நாடு பதில் மனு தாக்கல் செய்யும் என்று அறிவித்தார். ஆனால் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க முடியாது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்ததை ரத்து செய்ய முடியாது. அது முடிந்து போன பிரச்சனை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. அதையே.. அப்படியே.. தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் சொன்னார்.  மத்திய அரசு என்ன பதில் மனு போட்டதோ,  அதே பதில் பதிலை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு போட்டது.

மீண்டும் 2011ல் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி, நம்முடைய வருவாய்த்துறையை இணைத்து உச்ச நீதிமன்றத்திலே வழக்கை தொடர்ந்து இருக்கிறோம். ஆக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு தான் மீனவர்களை காப்பாற்றுகின்ற அரசு. கச்சதீவை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிற அரசு  அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.