கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,

காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி தமிழக டிஜிபியிடம்  அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், ஆட்சியில் அமர்ந்த 2 ஆண்டு காலத்தில் நீட் குறித்து யாரை சந்தித்து உள்ளார்கள் ??

அதிமுக ஒரு இமயம், திமுக போன்று கொத்தடிமை கிடையாது, தமிழகத்திற்கு இதுவரையில் என்ன செய்துள்ளார்கள், கச்ச தீவு என்றாலே திமுகவினர் ஓடிவிடுவார்கள், பணத்தை நோக்கிய என்னம் மட்டுமே அவர்களுக்கு உள்ளது,கருணாநிதி மற்றும் ஸ்டாலின்  விட்டு கொடுக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்டு எடுத்கும் இயக்கம் தான் அதிமுக என தெரிவித்தார் .

மேலும், அதே 20ஆம் தேதி ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தினார். சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்க்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கட்சியில்  இல்லாத ஒருவர் மாவட்ட செயலர் கூட்டத்தை நடத்துகிறார், அதை பெரிதாக தேவை இல்லை, அவர் ஒரு கஞ்சர் என கூறினார்.

அதேபோல் டிஜிபியிடம் கொடுத்த புகார் மீது பிஜிபி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, டி ஜி பி இடம் வழங்கப்பட்ட புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

மேலும் விஞ்சான வளர்ச்சி என்பது பெருமை பட வேண்டிய ஒன்று அதை சிறுமை படுத கூட்டது. ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு அரசியலுக்கு யார் வேண்டும் என்றாலும் வரலாம் ஆனால் மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.