மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் இளம்பெண் (30) ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணும் ரயில்வே காவல் அதிகாரி ஒருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணும், ரயில்வே அதிகாரியும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது பலமுறை அந்தப் பெண் பாலில் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பெண்ணை ரயில்வே காவல் அதிகாரி திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனை யாரிடம் கூறினாலும் நிலைமை மோசமாகிவிடும் என தொடர்ந்து மிரட்டியும் உள்ளார். இதனால் அந்தப் பெண் காவல்துறையில் ரயில்வே காவல் அதிகாரி மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரயில்வே அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.