செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவரும் பாஜக மாநிலத் தலைவரின் போஸ்டிங் க்கு போட்டா போட்டி நடக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அண்ணாமலை, தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஏற்கனவே ஒரு இடத்துல சொல்லி இருக்கிறேன். மாநில தலைவர் பதவி வெங்காயம் மாதிரி என்று சொல்லி இருப்பேன். என்ன வெங்காயம் என சொல்லிவிட்டீர்கள்  என்று கேட்காதீர்கள் ? நான் உண்மையை சொல்லுறேன். உறிச்சி பார்த்தா உள்ள ஒன்னும் இல்லை, ஒன்னும் இருக்காது. அதனால நான் எப்போதுமே அரசியல்  பதவிக்காக வந்தவன் கிடையாது. பதவியை தூக்கி போட்டு வந்தவன்.

நானே இதைவிட அதிகமா 10,  15 மடங்கு பவரை பார்த்தவன்.  நான் நிம்மதியா என் வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன். காலைல எனக்கு பிடிச்சது செய்றேன், நேத்து தோட்டத்துக்கு போனேன்.  ஆடு, மாட்ட பார்த்தேன். எனக்குன்னு ஒரு தனி வாழ்க்கை இருக்கு. அந்த குட்டி உலகத்துல நான் வாழ்கிறேன். அரசியல் என்னுடைய கருத்துக்களை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

இதை மாத்தி பேசி தான் இருக்கணும்னா.. இருக்க போறது கிடையாது. அப்படி மாத்தி பேசினா…  அண்ணாமலை இருக்க மாட்டான். என்னுடைய தனி உலகத்துல அரசியல் பண்றேன். மோடிக்காக அரசியல் வந்துருக்கேன். மோடியை தவிர இன்னொரு தலைவரை இந்தியாவுக்கு 100 ஆண்டுகளுக்கு கிடைக்கப்போவது கிடையாது. அண்ணாமலையிடம் அட்ஜஸ்ட்மென்ட் பாலிடெக் எப்போதும் கிடையாது.

ஒரு கருத்தை எடுத்தால் விடும்பு பிடி மாதிரி பிடிப்பேன். இன்னைக்கு அந்த கருத்துக்கு நேரமில்லை. அஞ்சு வருஷத்துக்கு பிறகு அந்த கருத்துக்கான நேரம் வரத்தான் போகுது. கருத்து என்ன ஓடிப்போயிருமா….  என்னை யாருக்காகவும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனக்காக வேண்டாம் நான் சில பேர் மாறலாம் என தெரிவித்தார்.