
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பாட்டியும், அவரது பேத்திக்கும் இடையே நடக்கும் சிரிப்பூட்டும், இரசிக்கத்தக்க வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வயதான பாட்டி ஒருவர் ஸ்டிரெய்ட்னர் மூலம் தன் முடியை நேராக்கிக்கொண்டிருப்பது காணப்படுகிறது.
பெரியவர்கள் ஸ்டைல் மீது அதிகம் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று பெரும்பாலானோர் கருதும் நிலையில், பாட்டி இப்படி ஸ்டைலாக இருப்பதுதான் இந்த வீடியோவின் ஹைலைட்.
அப்போதே பக்கத்தில் இருந்த பேத்தி கிண்டலாக, “பாட்டி, இவ்வளவு வயசுல முடி நேராக்குறத விட, பக்தியா தான் இருக்கணும்!” என்கிறார்.
ऐसी दादी हों तो घर के बिगड़े बच्चे भी सुधर जाएंगे pic.twitter.com/wtFBTxc882
— The News Basket (@thenewsbasket) July 8, 2025
அதனால் சிறிது கோபத்துடன், ஆனால் அதே நேரத்தில் பாசத்துடன் பாட்டி, “நீ நல்லா நேராக்குறியா? சரி நீயே நேராக்கு… இல்லாட்டி போ அங்கேயே போ” என பதில் அளிக்கிறார்.
இந்த உரையாடல் சுமார் 2½ நிமிடங்கள் நீடிக்கிறது. இதில் இரண்டு தலைமுறையினருக்கும் இடையே ஸ்டைல், வயது, யாருக்கு என்ன தெரியும் என்ற பாசப்போர் சுவையாக நகர்கிறது.
உரையாடலின் இறுதியில் பாட்டி, “காலை எழுந்துடு, படிக்கறத பார்த்துக்கோ… இந்த மொபைல் நல்லதில்லை… இல்லாட்டி…” என வார்த்தையை முடிக்காமல் விட்டுவிடுகிறார். இது பெரும்பாலான குடும்ப பாட்டிகளின் அடையாளமாக அமைந்துள்ளது.
இந்த வீடியோவில் பாட்டியின் நகைச்சுவையும், பேத்தியின் சுறுசுறுப்பும் சேர்ந்து பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளன. இந்திய குடும்பங்களில் காணப்படும் அன்பும், பழக்கவழக்கங்களும், தலைமுறைகளைத் தாண்டிய பாசமும் இந்த வீடியோவின் மூலமாக இணையத்தை வென்றுள்ளது. பாட்டியின் ஸ்டைலும், அறிவுரையும் நெஞ்சை உருக்கும் விதமாக நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளன.