கடலூரில் என்எல்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் விவசாய நிலங்களுக்கு பதிலாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் கடலூருக்கு வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, தென் மாவட்டங்களில் பாஜகவை தோற்கடித்தாலே அதன் பலம் குறைந்து விடும். கர்நாடகாவில் பாஜக சதி செய்த ஆட்சியை கவிழ்த்தது. இனி வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். என்எல்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் சார்பில் கடுமையான போராட்டம் நடத்தியதால் மத்திய அரசு ஒரு ஏக்கருக்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது. நாங்களும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வலியுறுத்துகிறோம். என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசிடம் ஒரு பிடி மண்ணைக் கூட இழக்க மாட்டோம் என அன்புமணி ராமதாஸ் கூறுவது அரசியல்‌ என்று கூறியுள்ளார்.