பாகிஸ்தான் மீது பஹல்காம் பகுதியில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்குள் செல்லும் முக்கிய நதிகளின் தண்ணீர் திறப்புகள் குறைக்கப்பட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானும் அதேபோன்று பாகிஸ்தானுக்குள் பாயும் துணைநதிகளின் நீர்வழிகளைத் தடுக்க திட்டமிட்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

அதன்படி, ஆப்கான்-பாக் எல்லையில் அமைந்துள்ள குனார் பகுதியில், புதிய அணை கட்டும் திட்டத்தில் தலிபான் அரசின் ராணுவ ஜெனரலான முகமது முபின்கான் நேரில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அணைக்கான நிதி திரட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலை பலூச் ஆதரவாளர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவுடன் ஜெனரல் முகமது முபின்கான் அணை திட்டம் குறித்து பேசும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அணை திட்டம், பாகிஸ்தானுக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்லும் நீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமையவுள்ளதாம். இது நடைமுறையில் வந்தால், பாகிஸ்தானுக்கு நீரின் ஆதாரம் மேலும் குறைந்து, அந்நாட்டின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கையுடன் ஆப்கானிஸ்தானின் நிலைப்பாடு ஒத்துப் போகும் வகையில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.