தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம்  நடைபெற்றது.

அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுவரை 24 காவல் விசாரணை மரணங்கள் நடந்துள்ளது என கூறினார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் கட்டாயம் வெற்றி மாலை சூடப் போகிறது. வெற்றிகரமாக நடந்து முடிந்த முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும் எனக் கூறினார்.