திமுக கட்சியின் எம் பி கனிமொழி நேற்று இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தை வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு நடத்தியது. இதற்கு தலைமையேற்ற எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு வக்பு திருத்த சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு கேடு விளைவித்து வருகிறது. இந்திய தொழிலதிபரான அம்பானி மற்றும் அதானி ஆகியவர்களின் தொழில் வளர்ச்சிக்காக சட்டங்களை உருவாக்கி வருகிறது.

இந்த ஆட்சி பொதுமக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை, மும்பையில் வக்புக்கு சொந்தமான நிலத்தில் அம்பானியின் வீடு கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்தின்படி இந்த நிலத்தில் 12 ஆண்டுகள் அம்பானி அந்த வீட்டில் இருந்து விட்டால் அந்த நிலம் அவருக்கே சொந்தமாகிவிடும். இவருக்காகவே மத்திய அரசு இந்த புதிய வக்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்று கண்டித்து கூறினார்.