செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது ? ஒன்றிய அரசின் உடைய… மோடி அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் CRPM என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன் மேனேஜ்மென்ட் மேப்பிங் என்று சொல்லப்படுகின்ற…
கடற்கரை ஓரத்தில் இருக்கக்கூடிய கிராமங்கள், குறிப்பாக மீனவ கிராமங்கள் – மீனவர்கள் பயன்படுத்துகின்ற அவர்களது வாழ்வாதார இடங்கள்… இந்தியாவினுடைய கடற்கரைப் பகுதிகளில் இருக்கக்கூடிய இந்த மீனவ பகுதிகளை வரைபடத்தில் ஆவண படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த கோஸ்டல் ரெகுலேஷன் மேனேஜ்மென்ட் பிளான் என்று சொல்லப்படக்கூடிய கடற்கரை மேலாண்மை திட்டத்திலே தமிழ்நாட்டிலும் கடற்கரை ஓரத்தில் இருக்கக்கூடிய கிராமங்கள், மீன் அவர்கள் பயன்படுத்துகின்ற நிலப்பகுதிகள், அவர்களது வாழ்வாதார இடங்களில் ஆகியவற்றை கணக்கில் எடுப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அந்த அடிப்படையில் அந்த கிராமங்கள் எல்லாம் குறிப்பிடப்பட்டு, வெளியிடப்பட்ட அறிக்கையிலே தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான மீனவ கிராமங்கள், மீனவர்களுடைய வாழ்வாதாரப்பகுதியில் விடுபட்டு இருக்கின்றன என தெரிவித்தார்.