தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது மற்றொரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதாவது அமமுக கட்சியில் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும், தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளருமான மா. சேகர் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக கூறி அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது மா. சேகர் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.