டாடா குழுமத்தின் மறைந்த தலைவர் ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கொலாபா பகுதியில் உள்ள ‘ த கேபின்ஸ்’ என்ற பங்களாவில் வசித்து வந்தார். கடல் முகம் பார்த்த நிலையில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட வீடு சுமார் 13,200 சதுர அடி பரப்பளவு கொண்டது.

ஒரு அடித்தளம் மற்றும் தரைத்தளம் உட்பட மூன்று மேல் தளங்களைக் கொண்ட இந்த இல்லத்தில் ரத்தன் டாடா தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களாவை வாடகைக்கு விடுவதாக டாடா குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி இந்த வீட்டிற்கு மாத வாடகையாக 17,57000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வாடகைக்கு எடுக்க முடியும் என்றும் முன்பணமாக பத்து கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.