கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கிராமத்தில் ஆனந்த்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சலவை தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20க்கும் மேற்பட்ட களுதைகளை வளர்த்து வருகிறார். அதில் வரும் பாலை விற்று வருவாய் ஈட்டி வருகிறார். இந்நிலையில் ஆனந்த் வழக்கம் போல் நேற்று தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த், உள்ளே சென்று பார்த்தபோது மற்ற கழுதைகள் மீது இரத்தம் தெளித்து இருந்தது.
அதன் பின் ஒரு பெண் கழுதையின் கழுத்து வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது. அதன் தலையை மர்ம நபர்கள் யாரோ எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர் என்று சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.