இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் திருமணமான தம்பதியினர் இருவரும் மனக்கோளத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் மணமகன், மணப்பெண்ணுக்கு வாழைப்பழத்தை ஊட்ட முயற்சி செய்கிறார். ஆனால் அந்தப் பெண் அதனை சாப்பிடாமல் அதை வாங்கி கீழே போடுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மணமகன் அந்தப் பெண் ஊட்டிய வாழைப்பழத்தை தனது வாயில் வைத்திருந்தார். அதை எடுத்து அவரும் கீழே போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.