தஞ்சாவூர் அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தோப்பில் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அதே பகுதியைச் செய்த பரமசிவத்தின் மகன் திருமேனி என்பவர் தோப்பிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன சிறுமி அலறி அடித்து அப்பகுதியில் இருந்து ஓடினார். அதன் பிறகு தனது பெற்றோரிடம் இதுகுறித்து அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருமேனியை கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.