தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ‌. தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதிவு செய்த அட்லீ நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல்,  பிகில் என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதன் பிறகு நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.‌ இந்நிலையில் ஜவான் படத்தை லியோ படத்துடன் சேர்ந்து வெளியிட அட்லீ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகிறது.

இதே நாளில் ஜவான் படமும் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் லியோ மற்றும் ஜவான் ரிலீசானால் லியோ படத்தின் வசூல் பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் லோகேஷ் கனகராஜின் படங்கள் எல்லாமே வெற்றி படங்கள் என்பதால் கண்டிப்பாக அட்லீயின் ஜவான் மற்றும் லியோ படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் இரு படங்களில் வசூலும் பாதிப்படையாமல் கண்டிப்பாக இரு படங்களும் வெற்றி அடையும் என்பது தான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது . மேலும் ஒரே நாளில் லியோ, ஜவான் ரிலீசாக இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.