
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் லாலாபேட்டையில் மொகிலி(45) மற்றும் அவரது மகன் சாய் குமார் (25) இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஹைதராபாத் அடுத்துள்ள குஷைகுடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மொகிலி தினமும் மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். அவரது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இவர் மது போதையில் வீட்டுக்கு வந்து மொகிலி மனைவி மற்றும் அவரது மகனை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாய் குமார் தனது தந்தை உயிருடன் இருந்தால் தன்னால் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி நேற்று மொகிலி லாலாபேட்டையில் இருந்து குஷைகுடா பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது மகன் சாய்குமார் பைக்கில் அவரை பின்தொடர்ந்தார். பின் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த மொகிலியை, சாய்குமார் கத்தியால் சரமாரியாக 15 முறை தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சாய்குமார் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.