துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த இரு நாடுகளின் துயரம் இன்னும் தீராததாகவே உள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுத்தில் சுமார் 80,000 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பு 2001 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கஜ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20000 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து நிலநடுக்க சாத்திய கூறுகள் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவு அறிக்கைகளும் வெளியாகி இருக்கின்றன. அதன்படி தேசிய புவி இயற்பியல் ஆய்வு கழகத்தின் தலைமை விஞ்ஞானி என். பூர்ண சந்திரரா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நிலநடுக்கங்கள் ஏற்பட காரணம் கந்த தட்டுகள் நகர்வதால் தான் இந்த கண்ட தட்டு அல்லது டெக்கானிக் பிளேட் என்பது.
ஆண்டுக்கு 5 சென்டிமீட்டர் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. மேலும் இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல மாநிலத்தின் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது உத்தரகாண்டில் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானி பூரண சந்திரராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.