கர்நாடகாவில் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் வர கால தாமதமானதால் முன்னாள் டென்னிஸ் வீரர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் மாநில டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் ஸ்பீடன் நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரரான பிஜோர்ன் போடர்க் மற்றும் முன்னாள் இந்திய டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து 11 மணிக்கு தனது மகன் இடம்பெறும் டென்னிஸ் போட்டியை காண வேண்டி போர்க் உடனடியாக அந்த விழாவில் இருந்து வெளியேறினார். தனியாக விருது பெறுவது சரியாக இருக்காது என இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜூம் விழாவில் இருந்து வெளியேறி உள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் வேறு சில நிகழ்ச்சிக்களில் பங்கிட்டு முதலமைச்சரால் சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது என தெரிவித்தது. அடுத்து இரண்டு நாட்களில் போர்க் மற்றும் அமிர்தராஜ் இருவரையும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு அழைத்து அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என கர்நாடாக மாநில டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.