திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இப்போது பக்தர்கள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கு அடையாள அட்டைக்கு பதிலாக பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இடைத்தரகர்கள் முறைகேடு செய்து டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்காக இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதே சமயம் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் அரிய நோயால் துன்பப்படுபவர்களுக்கு என தனியாக சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. அவ்வகையில் மார்ச் மாதத்திற்கான சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.