நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு இதன் உதவித்தொகை தேவை இல்லை என்ற பட்சத்தில் தங்களுக்கு பி எம் கிசான் தவணை நிதி வேண்டாம் என்று கூறும் வாய்ப்பை மத்திய வேளாண் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முதலில் பிஎம் கிஷான் என்ற திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் Surrender PM Kisan Benefits என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சென்று ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி உள்ளிட்ட சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக உங்களுக்கு surrender Pm Kisan benefits என்ற செய்தி கிடைத்துவிடும்