
கர்நாடக மாநிலம் ராமசமுத்திரத்தில் கோபால் நாயக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது தேனி அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடினர்.
அவர்கள் கீழே இறங்கிய நொடியே கார் வேகமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விபத்திற்குரிய காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.