
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நெருங்கிய நண்பர்கள் மூலம் மோசடிக்கு உள்ளாகினர். கார்த்திகேயன், நிலம் விற்பனை புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர்களான கதிரவன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக வலியுறுத்தி கார்த்திகேயனை ஏமாற்றியுள்ளனர்.
கார்த்திகேயனிடம் இருந்து 89 லட்சம் ரூபாயை நிலம் மற்றும் வீடு அடமானம் வைத்து பெற்றனர். இதற்கு கதிரவன், தென்காசி பகுதியில் உள்ள பைனான்சியரிடம் பணத்தை கொடுத்து வாங்குவதாக கூறி கார்த்திகேயனை அந்தப் பகுதியில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணத்தை பெற்றதும், காவல்துறை வருவதாக நடித்து கார்த்திகேயனை அப்பகுதியில் இருந்து விரட்டிவிட்டனர்.
தொடர்ந்து, கார்த்திகேயன்தான் ஏமாற்றபட்டதை உணர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கதிரவன் மற்றும் அசோக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பணத்தை சொந்தமான வீடு மற்றும் நிலம் வாங்க பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பம் தற்போது மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். பணத்தை மீட்க முடியாமல் தவித்து வருவதால், குழந்தைகளை கூட கல்லூரியில் சேர்ப்பதற்கு தகுந்த நிதி இல்லை என்று கூறியுள்ளனர்.