தமிழ் நடிகரும் மூக. தமிழரசுவின் மகனுமான அருள்நிதி படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது ஷூட்டிங்கில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதின்படி தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். எனவே சற்று முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சகோதரனின் மகனை நேரில் சென்று பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

மேலும் அருள்நிதியின் உடல் நலம் மற்றும் மேற்படி உள்ள சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்துள்ளார்.