கேபிடல்மைண்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆன தீபக் ஷெனாய், கடந்த சில நாட்களாக முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அலுவலகத்திற்கு செல்ல பேருந்தைப் பயன்படுத்தினார்.

இதில் அதிர்ச்சியளிக்கும்படி, அவரிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் வெறும் ₹6 மட்டுமே. இது குறித்து X தளத்தில் பகிர்ந்த அவர், “ஒரு கிலோமீட்டருக்கு ₹6 குடுத்து பஸ்ஸில் வந்தேன், அதன் பின் 30 நிமிடம் நடந்து அலுவலகம் வந்தேன்… இன்னும் ஷாக்ல இருக்கேன்,” எனக் குறிப்பிட்டார்.

அதோடு, பஸ்சில் கூட QR கோடு ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்தக்கூடிய வசதி இருந்தது எனவும் அவர் குறிப்பிடினார். “நான் அடிக்கடி A/C பஸ், மெட்ரோ போக்குவரத்தையே பயன்படுத்துவேன்.

ஆனால் இப்போ முழங்கால் பிரச்சனை இருந்ததால், ஒரு கிலோமீட்டருக்கு ₹6 குடுத்து பஸ்ஸில் வந்தேன். இது அளவுக்கு மீறிய சேமிப்பு போல இருந்தது” என்றார் தீபக் ஷெனாய். தீபக் ஷெனாயின் இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. பலரும், ஒரு CEO பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதும், அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பாராட்டத்தக்கது எனக் கூறியுள்ளனர்.

ஒரு பயனர், “பொதுப்போக்குவரத்து முறையான முறையில் ஊக்குவிக்கப்பட்டால் இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி அதில் உள்ளது” என தெரிவித்துள்ளார். மற்றொருவர், “இந்நேரத்தில் ₹6க்கு போக்குவரத்துக் கட்டணம் என்பது ஆச்சர்யமளிக்கிறது” என கருத்து தெரிவித்தார்.