பிசிஓஎஸ் என்று அழைக்கப்படும் பாலிஸ்டிக் ஓவரீஸ் பெண்கள் எதிர் கொள்ளும் உடல்நிலை பிரச்சினைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதை உடலில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் வளர்ச்சி மாற்றத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிசிஓஎஸ்-க்கு மருந்தே இல்லை என்பது உண்மைதான். என்றாலும் அதன் விளைவுகளை ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம் குறைக்க முடியும். பிசிஓஎஸ் ஏற்படுவதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும் சிறு வயதிலேயே ஏற்படும் உடல் பருமன் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் மாதவிடாய் பிரச்சனை, முடி உதிர்தல் முகத்தில் ரோமா வளர்ச்சி, முகப்பரு ஆகியவை பொதுவான அறிகுறிகள். பிசிஓஎஸ் உள்ள பெண்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு லாக்டோஸ் எதிரி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே முடிந்தவரை அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். பிசிஓஎஸ் அறிகுறி உள்ளவர்கள் குளூட்டன் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது உடலில் அதிக வீக்கத்தை ஏற்படுத்தி பிசிஓஎஸ் அறிகுறிகளை மோசமாக்குகிறது.

குளூட்டன் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு உள்ளிட்ட சில தானியங்களில் காணப்படும் புரதமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க நிறைய நார்ச்சத்து புரதமும் இருப்பது மிகவும் முக்கியம். உணவில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க முயற்சிக்கவும் அல்லது உடற்பயிற்சி செய்வது நல்லது. கார்டியோ அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் இருப்பதை உறுதி செய்யப்பட்டால் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.