இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் பெண் ஒருவர் தனது கையில் முள் இருப்பதாக குரங்கிடம் சென்று காட்டுகிறார்.

 

இதை பார்த்த அந்த குரங்கு அப்பெண்ணின் கையில் உள்ள முள்களை தட்டி விடுகிறது. இதனை அந்தப் பெண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்த பயனர், உயிரியல் பூங்கா பாதுகாப்பாளர் கையில் முள், மருத்துவரான குரங்கு என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.