உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத்தில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபரின் மகன். இவர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அந்தத் தொழிலதிபரின் மகன் மது அருந்திவிட்டு ஒரு தின கூலி தொழிலாளியின் மனைவியிடம் ரூபாய் 20000 கொடுத்து தனது ஆசைக்கிணங்க நடந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரது கணவர் மறுத்ததால், அந்தப் பெண்ணின் கணவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை மது குடிக்க கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவர் கத்தி கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்பொழுது தொழிலதிபரின் மகன் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறியதாவது,”மது அருந்திவிட்டு வந்த அவன் என் மனைவியிடம் பணம் கொடுக்க முன்வந்தான். நான் மறுத்ததால் துப்பாக்கியை எடுத்து மிரட்டி என் மனைவியை குடிக்க வைத்து வலு கட்டாயமாக பாலில் வன்கொடுமை செய்தான்”. என வாக்குமூலம் அளித்தார்.

இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபரின் மகனை கைது செய்தனர். இந்த சமயத்தில் குற்றவாளியின் குடும்பத்தினர் புகாரை வாபஸ் பெற பணம் கொடுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, இந்த புகார்கள் உண்மையானதா என்பதை ஆராய்ந்து மருத்துவ அறிக்கையின் படி முக்கியமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  மேலும் விரிவாக விசாரணை செய்து வருகிறோம். எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.