அமெரிக்காவில் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள எவன்ஸ்டன் நகரில் ”டேபிள் டூ ஸ்டிக்ஸ்” என்று உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் $19.89 க்கு உணவருந்திய நிலையில் $20 செலுத்திவிட்டு உணவகத்தில் இருந்து வெளியே சென்றார். அப்போது உணவகத்தின் உரிமையாளர் கென்னி சௌ என்பவர் அந்த வாடிக்கையாளரை பின்தொடர்ந்து வாக்குவாதம் செய்தார்.

அப்போது “18% சதவீதம் டிப்ஸ் வேண்டும்” என்றும், “நான் உன்னை அடித்து விடுவேன்….என் ஊழியர்கள் சம்பளம் எப்படி சம்பாதிப்பார்கள்…?” என்று சண்டையிட்டார்.. இந்நிலையில் வாடிக்கையாளர் “நான் என் உணவுக்கு பணம் செலுத்தி விட்டேன்…சட்டப்படி டிப்ஸ் கட்டாயமில்லை” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கென்னி சௌ தான் செய்த தவறை உணர்ந்து CBS NEWS chicago க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதோடு குற்றம் சாட்டப்பட்ட வாடிக்கையாளரின் தம்பிக்கு அவர் விரும்பும் உணவையும், தனது கையெழுத்துடன் கூடிய மன்னிப்பு கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக கென்னி சௌ மீது துன்புறுத்தல் வழக்கில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.