1980-களில் தென்னிந்திய திரையுலகை ஆட்சி செய்த முன்னணி நடிகர், நடிகைகள் 2025-ஆம் ஆண்டு மீண்டும் ஒன்று கூடி ஒரு சந்திப்பை நிகழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகள் 2024-இல்வே செய்யப்பட்டிருந்த போதும், அப்போது சென்னை பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

 

தற்போது அனைத்தும் சீராகிய நிலையில், மிக சிறப்பாக இந்த நிகழ்வு நடைபெற்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரையுலகினரையும் உள்ளடக்கிய இந்த நிகழ்வில் மொத்தம் 31 பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தமிழ் நடிகர்கள் பிரபு, சரத்குமார், பாக்யராஜ், மற்றும் பிரபல நடிகைகள் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா என முன்னணி பலர் இந்த சந்திப்பை சிறப்பித்தனர்.

பழைய கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, ஒரு குடும்பம் போல் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் அனைவரையும் உருக வைத்துள்ளது. இந்நிகழ்வுக்கான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.