
234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பரிசளித்தார். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.56 சதவீதம் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இதில் 96.44 சதவீதம் மாணவர்கள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12- ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் நாளை 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழா மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நடைபெற உள்ளது.