செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக சட்டசபையில் ஒரு பெண்ணுக்கு….  அதாவது 1989 ஆம் காலகட்டத்தில் மார்ச் 25 ஆம் தேதி அம்மாவுடைய சேலையெல்லாம் பிடித்து இழுத்து, அம்மாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ…  அவ்வளவு அவமானப்படுத்தி,  கேவலப்படுத்தியவர்கள் தான் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த அன்றைக்கு இருந்த திரு முதலமைச்சர் கருணாநிதி அவர்களும் – துரைமுருகன் அவர்களும்…

துரைமுருகனை அன்றைக்கு நாங்கள் வந்து துச்சாதனன் என்று தான் கூப்பிட்டோம். ஒரு துச்சாதனனாக இருந்து,  அம்மாவுடைய சேலையை பிடித்து இழுத்ததெல்லாம் இந்த நாட்டு மக்கள் என்றைக்கும் மறந்து விடவில்லை. எனவே அதற்கு தக்க பாடம் கொடுக்கின்ற வகையில் 91 ஆம் ஆண்டு….  அன்றைக்கு 1989ஆம் ஆண்டு அந்த சம்பவம் நடக்கும் போதே அம்மா சொன்னார்கள். மீண்டும் இந்த சட்டமன்றத்திற்கு வருவேன் என்றால் ? முதலமைச்சராக தான் வருவேன் என்று சொன்னார்கள்.

அதேபோன்று முதலமைச்சராக வந்து,  ஒரு பெரிய அளவு சாதனை படைத்தார்கள். 91 ஆம் ஆண்டு துரைமுருகன் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு கொடுஞ்செயல். ஒரு பெண் என்றும் பாராமல் அவ மரியாதை படுத்தி…. பெண்மையை இழிவு படுத்திய திமுக அரசுக்கு அன்றைக்கே பாடம் கொடுத்தார்கள்.

எப்போதுமே திமுக பெண்மையை மதிப்பதில்லை எனவேதான்  திருமதி நிர்மலா சீதாராமன் பொறுத்தவரை அன்றைக்கு திமுகவை பற்றி…  குறிப்பாக துரைமுருகனை பற்றி சொன்ன கருத்து உண்மையிலேயே வரவேற்கத் தகுந்த கருத்து தான் என்று நிச்சயமாக நான் சொல்வேன் என தெரிவித்தார்.