நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி விக்ரவாண்டியில் உள்ள கிராமத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான முறையில் அரங்கம் அமைக்கப்பட்டு, மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் விஜயின் பரபரப்பான பேச்சு தமிழக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த மாநாட்டை தொடர்ந்து 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தவெக கட்சி தயாராகி வருகிறது. இந்த மாநாடு நடத்துவதற்காக விவசாயி ராதாகிருஷ்ணன் தனது இடத்தை வழங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொண்டர்கள் பசுமாடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால் அந்த மாடு சரியாக பால் கறக்கவில்லை என்பதால் மீண்டும் புதிதாக ஒரு கறவை மாடு, கன்று குட்டியை பரிசளித்துள்ளனர்.