
பெங்களூரில் அய்யப்பா(20) என்ற மாணவன் தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்துள்ளார். இவர் தனது தாயிடம் கடந்த சில மாதங்களாகவே புதிய பைக் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
ஏனெனில் பொருளாதார நெருக்கடி காரணமாக அவரது மகனின் கோரிக்கையை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் அவர், அய்யப்பாவுக்கு தெரியாமல் பைக்கிற்காக 50000ரூபாய் ஏற்பாடு செய்து, அவரை ஆச்சரியப்படுத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தாய் வேலைக்கு சென்ற பிறகு, அய்யப்பா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மனவேதனையில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்பு வீட்டிற்கு திரும்பிய தாய், வீட்டின் கதவை திறந்து பார்க்கும் போது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலின் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.