தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா விவாகரத்து செய்யப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பிரபல பாலிவுட் விமர்சகர் உமர் சந்து விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்து விட்டதாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தளபதி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பதிவுக்கு பார்த்த தளபதி ரசிகர்கள் உமர் சந்துவை விளாசி வருகிறார்கள்.