கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாகியது. இந்த 2 படங்களும் ரூபாய்.200 கோடிக்கும் மேலாக நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது. இன்னும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் வாரிசு, துணிவு படங்கள் அதிக திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

டுவிட்டரில் ஒரு பிரபலம் மதுரையில் துணிவு திரைப்படம் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், தளபதியின் வாரிசு மெயின் ஸ்கிரீனில் ஒளிபரப்பாகி வருவதாகவும் கூறியுள்ளார். எனினும் மதுரையில் துணிவு திரைப்படத்தை விநியோகம் செய்த பிரபலம், எல்லா படத்தை விட துணிவுதான் அதிக வசூல் என பதில் டுவிட் செய்துள்ளார்.