தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றிக் கண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய்யின் தந்தை ஆவார். இதற்கிடையில் அப்பா-மகன் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வருகின்றனர். இதற்கான காரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்டில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவில் நெருக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
பிரபல இயக்குனராக இருந்தாலும் நடிகர் ரஜினிகாந்தை பொதுவெளியில் பார்த்தால் வயது வித்தியாசம் இன்றி ஓடிப்போய் அவருடைய காலில் விழுந்து விடுவாராம் எஸ்.ஏ சந்திரசேகர். தான் பெரிய ஹீரோவாக உள்ள நிலையில், தன் தந்தை இவ்வாறு வயது வித்தியாசம் இன்றி காலில் விழுவது நடிகர் விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். இதன் காரணமாக தான் தனது அப்பாவை விஜய் வெறுக்க தொடங்கிவிட்டார் என்று தகவல் கூறப்படுகிறது.
அதே சமயத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுவதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் மிகவும் கோபக்காரராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரை சாந்தப்படுத்தி அவருடைய கோபத்தை குறைக்க வைத்தது நடிகர் ரஜினிகாந்த் தான் என கூறப்படுகிறது. இதனால் தான் சந்திரசேகர் ரஜினிகாந்தை பார்க்கும் வேளையில் அவருடைய காலில் விழுந்து வருகிறாராம்.
இந்த காரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தன் பெற்றோரை விட்டு விலகி இருக்க அவரது மனைவியான சங்கீதா தான் காரணம் என தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் தன் அப்பாவை வெறுப்பதற்கான புது காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.