தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் நடிப்பில் சென்ற 11ஆம் தேதி ரிலீசான வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்ததாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பமானது. இந்த படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா வேதம் எனவும் அவருக்கு வில்லனாக ஆறு முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் விஜய் ரசிகர்கள் இடையே எதிர் பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கின்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பங்கேற்றபோது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் பிப்ரவரி 1,2,3 உள்ளிட்ட தேதிகளில் வெளியாகும் என தெரிவித்திருக்கின்றார். இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.