தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி  50 நாட்களைக் கடந்த ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைவார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதன் காரணம் ஜெய் பீம் படமானது சமூகநீதி பேசும் அரசியல் படமாக,  வெகுஜன மக்களிடையே நல்ல பாராட்டை பெற்றது.

இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததையடுத்து சூர்யாவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. பல விருதுகளுக்கும் இந்த படமானது பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு பிறகாக ஞானவேலை அழைத்து ரஜினிகாந்த் பேசிய நிலையில் ஒரு கதை உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும்,  பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம்,  பான் இந்தியா படமாக, இந்தியா முழுமைக்கும் பழமொழிகளில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இந்த படத்தை பெரிய அளவிலான பொருட்ச்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக லைக்கா நிறுவனத்தின் தரப்பில் இருந்து படம் குறித்த அதிகாரப்பூர்வ  அறிவிப்பானது வெளியிடப்பட்டது. முதலில் இந்த படத்தை தாங்கள் தயாரிப்பதாகவும்,  தலைவர் 170 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல ஞானவேல்  இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக நடிகர் –  நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரித்திகாசி மற்றும் சார்பட்டா பரம்பரை மூலம் பெரிய அளவில் புகழ் பெற்ற துஷாரா விஜயன் ஆகியோர் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல தற்போது தென்னிந்திய மொழிப்படங்களில் பெரிய அளவிலான வெற்றிகரமான நடிகராக வளரும் பகத் பாஸில் இணைவார் என்றும்,  ராணா பசுபதி இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு அடுத்த அப்டேட்டாக ரஜினியின்  நீண்ட கால நண்பரும்,  இந்திய அளவிலே சூப்பர் ஸ்டாராக விளங்கக்கூடிய அமிதாப்பச்சன் இணைவார் என தற்போது லைக்கா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறது.  ரஜினி படங்களை பொருத்தவரை இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலே வெளியாகும். பான் இந்தியா படங்களை பொறுத்தவரை ரஜினி எந்தவித பான் இந்தியா படங்களில்  நடிக்கவில்லை.

அதே நேரத்தில் இந்த படத்தை இந்திய அளவில் பெரிய அளவில் உருவாக்கி  லே வெளியிட லைக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,  மிகப் பெரிய பிரம்மாண்ட பொருட்ச செலவில், மிகப் பிரம்மாண்டமான கருத்து சொல்லக்கூடிய படமாக இந்த படம் இருக்கும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது அமிதாப்பச்சனும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது கூடுதலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.