திருமணமான தம்பதிகள் முதல் தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இந்த வருடம் யார் எல்லாம் தலை தீபாவளி கொண்டாட இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன்
இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தங்களது தல தீபாவளியை ஜாலியாக கொண்டாட இருக்கிறார்கள் .

கௌதம் கார்த்திக்- மஞ்சுமா மோகன்

தமிழில் அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படத்தின் மூலம் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது நட்பு ஏற்பட்ட காதல் ஆக மாறியது. இருவரும் கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

அமலாபால்-ஜெகத் தேசாய்
அமலாபால் தனது சொந்த வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களை பெற்றுள்ளார். சமீபத்தில் அமலா பாலின் நண்பர் ஜெகத் தேசாய் அவரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் கடந்த வாரம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தல தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

கவின்-மோனிகா
கவின் மோனிகா திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு அவருக்கு நிறைய பேர் ரசிகர்கள் ஆனார்கள். டாடா படத்தை வெற்றிக்கு பிறகு கவின் தனது நீண்ட வருட காதலை மோனிகாவை கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களும் தல தீபாவளி கொண்டாட உள்ளனர்.

ஹரிஷ் கல்யாண்- நர்மதா

ஹரிஷ் கல்யாண் தொழிலதிபரின் மகள் நர்மதாவை கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடியுள்ளனர். வரும் தீபாவளி இவர்களுக்கு தல தீபாவளி ஆகும்.

ஹன்சிகா மோத்வானி – சோஹேல் கதூரியா
தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் சோஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களும் தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.