
தமிழ் திரையுலகில் பிரபல டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவருடைய இயக்கத்தில் வெளியாகிய ஏராளமான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றி பெற்றுள்ளது. அதே நேரம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவிய படம் ஜி. அஜித்-திரிஷா நடிப்பில் வெளியாகிய இப்படத்தின் ஸ்டோரியை கேட்டு இந்த கதையை தனக்காக மாற்றும்படி கேட்டுள்ளார் ரஜினிகாந்த்.
லிங்குசாமி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது “ரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை அழைத்து பாராட்டினார். இந்நிலையில் அடுத்த கதை என்ன என கேட்க ஜி படத்தின் கதையை சொன்னதும் அவர் இந்த கதையை எனக்காக மாற்ற முடியுமா எனக் கேட்டார். இப்படத்தில் ஹீரோ கல்லூரி மாணவன் என்பதால் அந்த கதை உங்களுக்கு சரிவராது என நான் கூறினேன். அதோடு அதற்கு பதில் நான் அண்ணாமலை போல் அரசியல் இல்லாத படமாக பண்ணலாம் என தெரிவித்ததாக லிங்குசாமி பேட்டியில் கூறியுள்ளார்.