விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில் பட்டியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் அங்குள்ள பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலின் படி பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.