இலங்கையில் கதிர்காமம் என்ற புண்ணியஸ்தலம் அமைந்துள்ள நிலையில், இங்கிருந்து குருணாகல் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொத்தமலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த விபத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த நிலையில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதன் பிறகு 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.