
ரஷ்யாவின் தலைநகரமாக மாஸ்கோ உள்ளது. இங்கு நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதாவது மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளது. அந்த குடியிருப்பு கட்டிடத்தில் வாயிலில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் சிதறியதில் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய டெலிகிராம் சேனலில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படத்தில் இடுப்பாடுகளில், ரத்தக்கரை படிந்த 2 உடல்கள் கிடக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
உக்ரைன் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்று அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது குற்றம் சாட்டியிருந்தது. அதனால் தான் தற்போது இந்த கொலை அரங்கேரி உள்ளது என்று கூறப்படுகிறது. இந்தக் கொலைக்கு உக்ரைன் தான் காரணம் என்று கிளவுத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இந்த கொலைக்கு பின்னால் இருப்பது உக்கரையின் பாதுகாப்பு அமைப்பான sbu என்று கூறப்படுகிறது. ஜெனரல் ஒரு போர் குற்றவாளி என்றும் எனவே தான் இந்த இலக்கு என்றும் உக்ரைன் கருதுவதாக கூறப்படுகிறது.