பல் என்பது அனைவருக்கும் இருக்கும் சாதாரணமான ஒன்றுதான் ஆனால் ஒரு விஞ்ஞானியின் பல் ஏலத்தில் விற்கப்பட்டது என்ற தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் அனைவருக்கும் தெரிந்த சார் ஐசக் நியூட்டன் 1826 ஆம் ஆண்டு மறைந்தாலும் அவர் கண்டுபிடித்த படைப்புகள் அறிவியலில் அடித்தளமாக இன்னும் விளங்குகிறது. 1816ஆம் ஆண்டில் சார் ஐசக் நியூட்டனின் ஒரு பல் லண்டனில் எண் 3,633 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் விற்கப்பட்டது.

தற்போது, இதற்கான மதிப்பு சுமார் 35,700 அமெரிக்க டாலர், அதாவது சுமார் 30.03 லட்ச ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவருடைய பல்லை ஏலத்தில் வாங்கியவர் ஒரு அரச குடியினர் ஆவார். அவர் அந்தப் பல்லை மோதிரத்தில் பொரித்ததாக கூறப்படுகிறது. கின்னஸ் உலக சாதனைகள் இதை உலகின் மிக உயர்ந்த விலையில் விற்கப்பட்ட மனித பல்லாக பதிவு செய்துள்ளது. அதாவது சாதாரணமாக ஒரு மனிதன் இறந்தால் அவனுடைய பல் மண்ணுக்கு சொந்தமாகும். ஆனால் அறிவியலின் விஞ்ஞானி சார் ஐசக் நியூட்டன் இறந்தாலும் அவருடைய பல் நல்ல ஒரு விலைமதிப்பை பெற்று உள்ளது என்ற தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.